இலங்கையில் அமைதியை பேணுவதற்கு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா (Shavendra Silva) கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (09-07-2022) இரவு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியான சூழலுக்கு, அமைதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அமைதியை பேணுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.