அவிசாவளையில் இடம் பெற்ற விபத்தில் 23 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அவிசாவளை பிரதான வீதியில் உள்ள உக்வத்தை மயானத்திற்கு முன்பாக தான் பயணித்த அதே பேருந்து மோதியதில் இச் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவமானது (25.06.2023) இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை புவக்பிட்டிய பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய டொலவகே டோனா திலக்ஷி டில்ஷிகா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி அவிசாவளையில் இருந்து குறித்த பேருந்தில் வருகை தந்து உக்வத்தை மயானத்திற்கு அருகில் இறங்கியுள்ளார்.
இதன் போது பின்னால் இயக்க முற்பட்ட அதே பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.