எல்ல பிரதேசத்தில் வைத்து தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவரை 3 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று நேற்று (18) மஹவ பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டப்போது சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது சாரதி இருக்கைக்கு அருகாமையில் சிறிய பொதி ஒன்று இருந்ததுடன், அது தனது உணவு பொதி என சாரதி கூறியுள்ளார்.
இருப்பினும், பொலிஸார் அதனை சோதனையிட்ட போது இந்த ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 43 வயதான ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.