வாத்துவ, மெலேகம பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண்ணொருவர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பஸ்ஸில் தற்செயலாக சந்தித்த ஒரு பெண்ணே இவ்வாறு திருட்டியில் ஈடுபட்டுள்ளதாக தம்பதியினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் – கொழும்பு பஸ்ஸில் சமீபத்தில் தம்பதியினர் அந்த பெண்ணை தற்செயலாக சந்தித்துள்ள நிலையில் நட்பாக பழகியுள்ளார்.
பின்னர் நட்பாக பழகிய பெண், வாத்துவ, மெலேகமவில் உள்ள அந்த தம்பதியின் வீட்டிற்கு சென்று, மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்த பெண், சாப்பிடுவதற்காக ஏதேனும் தருமாறு கோரியுள்ளார்.திருடப்பட்ட வீட்டின் பெண் கூறுகையில்,
“அவர் இங்கேயும் அங்கேயும் நடந்து தேநீரை குடித்தார். எனது தேநீர் ஆறியதும் ஒரேயடியாகக் குடித்தேன். அப்போது எனக்குக் கொஞ்சம் மயக்கம் வந்தது. அதன் பிறகு எனக்கு என்ன ஆனது என தெரியவில்லை.” என்றார்.
பின்னர் சந்தேகநபரான பெண் அந்த தம்பதியரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிவிட்டு சாமர்த்தியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் தம்பதியினர் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.