நுவரெலியா பேருந்து நிலையத்தில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா சாந்திபுர அளுத் தொகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.ஏ.ரோஹித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
உயிரிழந்தவர் நுவரெலியாவில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர். இவர் தனது தேவைக்காக நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இப் பாரிய விபத்து இடம் பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்றதை அடுத்து விபத்து தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு நுவரெலியா வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.