யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்து புளியாங்குளம் பகுதியில் யுவதி மறிக்கையில் நிற்காமல் போனதைத்தொடர்ந்து யுவதி பேருந்தி் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவமானது நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டினடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி நகரில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.