மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தனகல்ல, யதவக்க பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்களை மீட்க அதிகாரிகளால் சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.