பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் டிபென்டர் வாகனத்தில் வந்த சிலர் வர்த்தக நிலையமொன்றுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கெப் வாகனத்தில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், கொலை செய்த சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுட்ஃஅன் பொலிஸார் வீசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.