பெலாரஸ் – லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திகதி லித்துவேனிய நாட்டின் எல்லையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள புதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பனவற்றின் மூலம் குறித்த நபர் 29 வயதான இலங்கைப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவரது மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தகவல் தெரியவருகையில் பிரான்ஸ் நாட்டுக்கு அகதியாக செல்ல முயற்சித்த சமயம் லித்துவேனிய காட்டுப் பகுதியான எல்லைப் பகுதியில் உயிரிழந்தார், ஆள் கடத்தல் முகவர் ஊடாக லித்துவேனிய நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சி மேற்கொண்ட போது குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றதாக அறியமுடிகின்றது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதான கிருசாந்தன் றோகுவன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸிற்கு அகதியாக செல்ல முயற்சித்த சமயம் லித்துவேனிய காட்டுப் பகுதியான எல்லைப் பகுதியில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.