கேரளாவில் பெற்ற மகனை தாயே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு, புதுப்பள்ளிதெருவை சேர்ந்தவர் சுலைமான்; டாக்ஸி டிரைவரா ஷாஹிதா(32) என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் ஷாஹிதா, துாங்கி கொண்டிருந்த இளைய மகன் ஆமீலின்(6), கால்களை கயிறால் கட்டி, கழிப்பறைக்கு தூக்கிச் சென்று, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அதன் பின் இது குறித்து அவரே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு தோன்றிய கனவின்படி, மகனை பலி கொடுத்ததாக கூறியுள்ளார்.
முந்தைய நாள், வீட்டின் அருகில் குடியிருப்போரிடம் பொலிசாரின் எண், கேட்டு வாங்கியுள்ளார். இதனால், அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.