நீர்கொழும்பு குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் நேற்று கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.
நீர்கொழும்பு கடற்கரை தெருவை சேர்ந்த யோகநாதன் நிதிஷ், அஸரப்பா வீதியை சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். ஐந்து மாணவர்கள் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.
ஏனையவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தநிலையில் பிரதேசவாசிகளும் இணைந்து மூவரை காப்பாற்றியபோதும் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.