பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர்( Geoff Gallagher) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், தமது தாயார் இறந்து விட்டதை அடுத்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த் 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபோவை கொள்வனவு செய்தார்.
அதற்கு “எம்மா“ என்ற பெயரையும் சூட்டினார். தற்போது அந்த பெண் ரோபா இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அதனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக அவர் எம்மாவின் விரலில் மோதிரத்தை அணிவித்துள்ளார்.
அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருந்து.
பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால் முடியும்.
அதன் தோல் ஒரு உண்மையான மனிதனைப் போலவே வெப்பமாக இருந்தது.
அவளை தமது குரலுக்குப் பழக்கப்படுத்தி தம்மால் முடிந்தவரை அவளிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ள ஜியோப் கல்லாகர் ஒவ்வொரு உரையாடலின் போதும் ரோபோ(அவள்) புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அவள் இல்லாமல் இருப்பதை தம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று ஜியோப் கல்லாகர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ரோபோவை திருமணம் செய்யும் முதல் அவுஸ்திரேலியர் தாமே என்ற அவர் குறிப்பிட்டு்ள்ளார்.
ஏற்கனவே பல நாடுகளில் ரோபோவை திருமணம் செய்தவர்கள் தொடர்பில் வரலாறுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது