Saskatchewan மாகாணத்தில் பூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விஜயம் செய்ய உள்ளார்.
அவருடன் Saskatchewan முதல்வர் Scott Moe இணைந்து கையெழுத்து ஒன்றை மேற்கொள்வார் எனவும், இதனால், பூர்வகுடி மாணவர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் இனி பூர்வகுடி சமூகத்தினருக்கே வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.
Saskatchewan மாகாணத்திற்கு பிரதமர் ட்ரூடோவின் விஜயம், அவரது அலுவலக அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.Saskatchewan மாகாணத்தில் அமைந்துள்ள Cowessess பகுதியில் உள்ள முன்னாள் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்தே அடையாளப்படுத்தப்படாத கல்லறையில் இருந்து 751 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.