காணாமல்போன பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 65 மற்றும் 79 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்கள் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ள நிலையில், நேற்று (17) இரவு இந்த வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட முற்பட்ட போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து , வீட்டின் ஜன்னல் வழியாக பொலிஸார் உள்ளே பார்த்த போது வீட்டிற்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.