புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக தொழிற்சாலை எரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தீயை அணைக்க புஸ்ஸல்லாவ போலிஸாரும் பொது மக்களும் முயற்சித்த போதும் தொழிற்சாலை முற்றாக எறிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்களோ சேத பொருட்களோ இது வரை கண்டறியப்படாத நிலையில் மின்ன ஒலிக்கின் காரணமாகா தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அங்கு ஏற்பட்ட தீயின் காரணமாக அக் கட்டிடத்திற்கு பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு தாயரிக்கப்பட்டிருந்த தேயிலையும் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.