பிரான்சில் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்பட்டுவந்த ஒரு புலம்பெயர் தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் அவரது காதலி.
அந்த இளைஞன் பெண்னுடன் தொலைபேசியில் பேசிய விடயங்களை ஒலிப்பதிவுசெய்து, தான் ஏமாற்றப்படட விடயங்களை அவனது முன்னாள் காதலி வெளியிட்ட விடயம் புலம்பெயர் நாடுகளில் பரபரப்பாகியுள்ளது.
பெண்களைக் காதலிப்பது, அவரிடம் இருந்து பணத்தை, நகைகளை எடுப்பது, பின்னர் ஏமாற்றி விரட்டிவிடுவது.. ஒருவேளை நீதி கேட்டால் காதலிக்கும் போது எடுத்துவைத்துள்ள புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவது.. புலம்பெயர் நாடொன்றில் இதனையே தொழிலாகச் செய்துவந்த ஒரு தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் ஒரு பெண்.
அந்த இளைஞனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி பழைய காரங்களையெல்லாம் அவனது வாயாலேயே வரவளைத்து அவற்றை ஒலிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் ஆதாரமாக வெளியிட்டுள்ளார் அந்தப் பெண்.
குறிப்பிட்ட அந்த இளைஞன் பற்றி காவல்துறையிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.