இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இதுவரை இல்லாதளவு பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றமையால் வெளிநாட்டுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் நாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது சமையல் எரிவாயு, பால்மா, மண்ணெண்ணெய் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொருட்களின் விலையும் கட்டுப்பாடின்றி உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் நாட்டின் வருவாய் 14 பில்லியன் டொலர்கள் நட்டத்தை அடைந்துள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு வருவாய்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் 60 வீதத்தால் குறைவடைந்து இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.
இலங்கை சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன் தொகை மொத்தமாக 15 பில்லியன் டாலர் அளவில் செலுத்த வேண்டிய நிலையில் நிதி நெருக்கடிகளை கையாள முடியாமல் திண்டாடி வருகிறது.