புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை(27) முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது.