அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் வரை காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் புத்தாண்டு தினம் இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய சாரதி, மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் காயமடைந்த 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
நியூ ஆர்லியன்ஸ் – போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தத நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது