கம்பளை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்று முன்தினம் (15-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வழுக்கும் மரம் ஏறும் போட்டியின் போது அது சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் வழுக்கு மரத்தில் ஏற முயன்ற 4 பேர் விபத்தில் காயமடைந்தனர்.