புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hilton) தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் (Sarah Hilton) குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் அமைதியான முறையிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hilton) மேலும் தெரிவித்துள்ளார்.