நடிகர் விஜய் படைத்த புதிய சாதனை குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் செய்த புதிய சாதனை
இந்நிலையில், நேற்று முன் தினம் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் விஜய் இன்ஸ்டாவில் தனது புதிய கணக்கை தொடங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் விஜய், தற்போது, டுவிட்டரை விட அதிக பிரபலமான இன்ஸ்டாவிலும் கணக்கை தொடங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாவில் கணக்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
தற்போது, 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் விஜய் உலக அளவில் 3 வது இடத்தை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.