பீஸ்ட் படக் குழுவுடன் தளபதி விஜய் அவர்கள் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலியாக ரவுண்ட் அடித்த காணொளி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் திகதி வெளியாகிறது. படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்தது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் விஜய் ரிச் ஆகவும், நெல்சன் மேக்கிங் பிரஷ் ஆகவும் ஒலித்தனர். கேமராவும் சிறப்பாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தளபதி விஜய் அவர்கள் இயக்குநர் நெளிசனுடன் உரையாடியபோது அவர் படக் குழுவினருடன் ஜாலியாக தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். தற்போது அந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .