வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்றுமாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை காப்பாற்றிய அயலவர்கள், சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் 119 அவசர பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த மத்துரட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயை கைதுசெய்துள்ளனர்.
கைவிட்ட கணவன்
தனது கணவர் தன்னையும், பிள்ளைகளையும் கவனிப்பதில்லை, உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை.
இதனால், தொடர்ந்து பட்டினிச் சாவை எதிர்கொள்கிறோம். இதனாலேயே நஞ்சருந்தி உயிரை மாய்த்து கொள்ள முயன்றதாக தாயால் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஆறு, ஐந்து மற்றும் ஒரு வயதுகளையுடைய பிள்ளைகளுக்கே இத்தாய், நஞ்சூட்டி உள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மத்துரட்ட பொலிஸார், தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.