விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பெண்கள் உட்பட 9 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு – ஏத்துகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலேயே சந்த்ர்ர்க நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கிராம் ஐஸ், 9 கிராம் ஹெரோயின், 350 மில்லிகிராம் கஞ்சா மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிசார் கூறியுள்ளனர்.