லண்டனை வதிவிடமாகவும் கிளிநொச்சியை சொந்த இடமாகவும் கொண்ட 47 வயதான குடும்பஸ்தர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் கடை ஒன்றை நடாத்திவரும் குறித்த குடும்பஸ்தர் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகின்றது.
சிங்கப்பூர் சென்றதாக மனைவி தகவல்
சிங்கப்பூர் செல்வதாக கணவர் கூறிச் சென்றதாக குடும்பஸ்தரின் மனைவி தாய்லாந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.