இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
குறித்த வருகையின் போது யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பொது நூலக பிரதான வாயிலில் ” விசேட காரணங்களுக்காக காலை 10.30 மணிக்கு பூட்டப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்” என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும், அறிவித்தலில் ” விசேட காரணம்” என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நூலக வாசகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அறிய முடிகிறது.
பிரித்தானிய இளவரசி ஆன் வருகை காரணமாக பொதுசன நூலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார், பாதுகாப்பு பிரிவு கடமையில் ஈடுபட்டனர்.