பிரித்தானியாவில் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்பது குறித்து நாட்டின் தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்-ல்’ பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்ற உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த தனது படிபடியான திட்டத்தை வெளியிடவுள்ளார்.
இந்நிலையில், மார்ச் 8 ஆம் திகதி பிரித்தானியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 29ம் திகதி முதல் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்லது 6 பேர் வெளிப்புறங்களில் சந்திக்க அனுமதி அளிக்கப்படும்.
படிபடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டிற்கானது என குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 8 முதல் இரண்டு பேர் வெளிப்புறங்களில் சந்திக்கவும், “ஒன்றாக காபி சாப்பிடவும் முடியும் என்று தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi கூறினார்.