பிரித்தானியாவில் இருந்து சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக உறவினர்கள் வருகை தந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எமது லங்காசிறி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
32 ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். ஆகவே இவர்களை விடுதலை செய்கிறோம் என்று கூறிய பின்பு (12.11.2022) சிறப்பு முகாமில் ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் அடைத்து வைத்தார்கள்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், இதற்கிடையில் மூன்று மாதங்களிந்கு முன்பு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சாந்தன் வழக்குத்தாக்கல் செய்தார். என் மீது இந்தியாவில் எந்த வழக்கும் இல்லை.
ஆகவே என்னை தாய் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.