பிரான்ஸிற்கு தப்பியோடிய உயர் பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக்க , நாளை ந்பணிக்கு திரும்பாவிட்டார் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக நபர்களிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி துமிந்த ஜயதிலக்க தெரிவித்திருந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க, உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறிய அவர் பிரான்ஸிலிருந்து அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் துமிந்த ஜயதிலக்க நாளை புதன்கிழமை (06) பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், நாளை (06) அவர் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துமிந்த ஜயதிலக்க வெளிநாடு சென்றிருந்தாலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பிரான்ஸ் இராணுவத்தில் துமிந்த ஜயதிலக்க சேரவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்படுவார் என பொலிஸ் வட்டரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.