பிரான்ஸிற்கான இலங்கையின் பனை சார்ந்த ஏற்றுமதிகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இலங்கையின் விவசாயத்துறை சார்ந்த உயர்ந்த ஏற்றுமதி வருமானமாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பனைசார் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு 45 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.