விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஜீப், யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து பயங்கரவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது.
அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.