பிரபல பாதாள உலக நபரான “கணேமுல்ல சஞ்சீவ” எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வரை வீரகுள பொலிஸ் வளாகத்தில் இருந்து மாற்றப்படக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (ஜன.24) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மனு மீதான அடுத்தகட்ட விசாரணை பெப்ரவரி 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“கனேமுல்ல சஞ்சீவ” கடந்த செப்டம்பர் 13 திகதி அன்று நேபாளத்திலிருந்து திரும்பியவுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது அவரிடம் போலியான கடவுச்சீட்டு இருந்ததுடன், தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் இருந்தன.
படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கருதப்படும் “கனேமுல்ல சஞ்சீவ”, பின்னர் நேபாளத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவரைக் கைது செய்வதற்கான சர்வதேச ‘ரெட் வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.