கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு மஹரகம பிரதேசத்தில் 17 வயது சிறுவன், 14 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் மஹரகம பிரதேசத்தில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என கூறப்படுகின்றது.
இருவரும் கடந்த வருடம் முதல் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அதோடு இருவரும் பாடசாலை மற்றும் டியுசன் வகுப்புகளை தவிர்த்து ஒன்றாக நேரத்தை செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.