ஒன்றை சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்ற இலங்கையின் பிரபல பாடகியான ஜொகானி (Yohani) இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின் ((Prasanna De Silva) ) மகள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் சிங்களம், தமிழ், மாலையாளம், நேபாளி உட்பட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவந்துள்ளது.
இதேவேளை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஜொகானி டி சில்வாவே பாடியுள்ளார். மேலும் இப்பாடல் மூலம் இலங்கையின் பிரபல் பாடகிக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ஜொகானிவின் தந்தையான பிரசன்ன டி சில்வாவுடன் பணியாற்றிய தருணங்களை போர்க்கள அனுபவங்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா முகப்புத்தகத்தில் பதிவிட்ட விடயம்,
2006- ஆம் ஆண்டு சிறப்புப் படைகளில் தளபதியாக உங்கள் தந்தை (கேர்ணல் பிரசன்ன டி சில்வா) மாவிலாறை விடுவிக்க என்னை வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு வரவழைத்தார்.
கல்லாறுக்கு சென்ற நான், காலாட்படை, பீரங்கி, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் விமானப்படை உதவியுடன், ஒரு வாரத்திற்குள் மாவிலாற்றை கைப்பற்றுமாறு சிறப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் உபயோகப்படுத்திய மாவிலாற்றின் முக்கிய மதகுகளை இராணுவம் கைப்பற்றியது. இதன்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மனிதாபிமான காரணிகளை போரின் கருவிகளாக உபயோகப்படுத்த கூடாது என கற்பிக்கப்பட்டது.
மாவிலாற்றை கைப்பற்றியதற்கு பின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட மீண்டும் கேர்ணல் பிரசன்ன டி சில்வா என்னை அழைத்தார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் உங்கள் தந்தையின் திறமையான மற்றும் கூட்டு அபிலாஷைகளின் மூலமும், வீரம் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமும் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றிகள் போல, இன்று சர்வதேச அரங்கில் நீங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு பெரும் புகழை தேடி தந்துள்ளீர்கள்” என அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் போர்க்களத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் சரத் பொன்சேகாவின் தொடர்பு உண்டென்பதை வெளிக்காட்டியுள்ளது.