நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விதகாத விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது, விடுதியின் முகாமையாளரான பெண் மற்றும் தகாத தொழிலில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களும் கண்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதான இருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.