பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவிருக்கிறது. முந்தைய 5 சீசன்களை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
விக்ரம் பட வெற்றியை அடுத்து படங்களில் பிசியாகிவிட்டார். இதனால் பிக் பாஸ் 6வது சீசனை கமல் அல்ல மாறாக சிம்பு தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று பேச்சு கிளம்பியது.
எனினும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை சிம்பு அல்ல கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார் என்று நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் கூறுகின்றன. பிக் பாஸ் மேடையில் கமலை பார்க்கத் தான் பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அதனால் இந்த தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம்.
இதற்கிடையே லெஜண்ட் சரவணனை பிக் பாஸ் 6 வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லெஜண்ட் மட்டும் அந்த வீட்டிற்கு சென்றால் வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள். ஆனால் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அதேவேளை விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து தன் சம்பளத்தை உயர்த்திவிட்டார் கமல் ஹாசன். ரூ. 130 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு எத்தனை கோடி சம்பளம் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.
அதேவேளை பிக் பாஸ் சீசன் 6ல் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. திடீர் பேட்டி, சர்ச்சையான பதில், சிம்பு மேல் காதல் என வரிசையாக தொடர்ந்து இணையத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.