ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அததெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்தார்.
குறித்த விலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த வாரத்திற்குள் பால் மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் இருந்து பால் மாவை விடுவித்துக் கொள்ள டொலர் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.