பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் தமது தொகுதி மக்களுடனான வழக்கமான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் அவர் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அளவில் இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.