சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (09) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.