பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏறத்தாழ 100 பெண் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு பவ்ரல் அமைப்பு இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதற்கமைய சட்டமியற்றல் உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள், நிலையியற் கட்டளைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் உள்ளிட்ட துறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வூட்டப்படும்.
அவர்களுக்காக நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைச் சார்த்த இளைஞர் யுவதிகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்காக எதிர்வரும் 16ஆம் திகதியம் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சிகளும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது