பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (24) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள,அயகம மற்றும் அலுபோமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19,20,23 மற்றும் 29 வயதுடைய ஐந்து நபர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் அங்குக் கடமையிலிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இவர்களைக் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.