மஹா ஓயாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 19 வயதுடைய மாணவனை தாக்கிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை ஆசிரியர்கள் பலரால் தாக்கப்பட்டதையடுத்து தனது குழந்தை மாயா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 37 மற்றும் 43 வயதுடைய மஹா ஓயா மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைதான ஆசியர்கள் இன்று தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.