பாடசாலைகளை நாளை (12) திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி இன்று (11) பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடனான கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.