பாகிஸ்தானில் பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 ஆசியர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் குர்ரம் பழங்குடியின மாவட்டத்தின் பகுதி பரசினார். இங்குள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 7 ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றது என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை சேகரித்து, விசாரணைகளை நடத்தி வருவதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியினர் மாவட்டத்தில் பெரும்பாலான ஷியைட் மக்கள் உள்ளனர், அவர்கள் சில குழுக்களால் அடிக்கடி தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.