அதிபர் மற்றும் ஆசியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படு வருகின்றது.
நேற்றையதினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறிப்பாக வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் குறைந்த அளவான மாணவர்களே சென்ற நிலையில் ஒரு சில ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு பிரசன்னமாக இருந்தனர்.
எனினும், பெற்றோர் தாம் அழைத்து வந்த பிள்ளைகளை மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பால் கற்றலுக்காக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.