நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான 3ம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவித்தல் ஒன்றை கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் 2023ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (01-01-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் 25 மாவட்டங்களில் உயர்தரத்துக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.
பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார்.