மட்டக்களப்பு பாடகர் மீது அடையாளம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு இலக்கான பாடகர் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வெட்டுக்காயங்கள் தீவிரமாக இருந்தபடியால் மேலும் அதிக சிகிச்சை தேவை என்ற பட்சத்தில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இரவுவேளை தனது சொந்த ஊரில் இருந்து மண்டூரிலுள்ள கடையில் உணவு வாங்கச்சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரிய வாளால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக சொல்லிசை பாடகர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் வெல்லாவெளி பொலிஸில் புகார் அளித்திருந்தவேளை வாள் வெட்டை நடத்தியவரை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான சந்தேகநபரை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.