பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிற நிலையில் நேற்று (9) நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.
பதவிக் காலம் முடியும் முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்த அவர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.