பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து அவர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.